7

«اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي وَنُورَ صَدْري وَجِلَاءَ حُزْنِي وَذَهَابَ هَمِّي»
{وهو دعاء الهم والحزن}

அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாசியதீ பியதிக, மாளின் ஃபிய்ய ஹுக்முக, அத்லுன் ஃபிய்ய களாஉக, அஸ்அலுக பி குல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹி நஃப்ஸக, அவ் அன்ஜல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் கல்கிக, அவ் இஸ்தஃதர்த்த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ, வ நூர பஸரீ, வ ஜலாஅ ஹுஸ்னீ, வ தஹாப ஹம்மீ

யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன் அடிமையாவேன். உன் அடிமை ஒருவரின் மகனுமாவேன். உன் அடியாளி ஒருத்தியின் மகனுமாவேன். என்னுடைய முன் நெற்றி உன் கையிலாகும். உனது தீர்ப்பு என்னில் செல்லுபடியாகும். என்னிலே உனது ஏற்பாடும் நீதமாகும். எவைகளை நீ உனக்காக பெயராக வைத்துக் கொண்டாயோ அல்லது உன்னுடைய வேதத்தில் எதை இறக்கிவைத்துள்ளாயோ அல்லது உன்னுடைய படைப்புகளில் எவருக்கு அதைக்கற்றுக் கொடுத்துள்ளாயோ அல்லது உன்னிடமுள்ள மறைவான ஞானத்தில் எதை உனக்காக பிரத்தியேகமாக தேர்வு செய்து வைத்துக் கொண்டுள்ளாயோ அத்தகைய ஒவ்வொரு பெயரையும் முன்வைத்துக் கேட்கிறேன். குர்ஆனை என் இதயத்திற்கு வசந்தமாகவும், என் பார்வைக்கு ஒளியாகவும், என் கவலைக்கு மருந்தாகவும், என் துக்கத்தையும், கவலையையும் போக்கிவிடும் ஒன்றாகவும் ஆக்கி அருள் புரிவாயாக!

{இது கவலை, துன்பத்தின் போது ஓதும் துஆவாகும்}

7/19