«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الخَيْرَاتِ، وَتَرْكَ الْمُنْكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِينِ، وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي، وَإِذَا أَرَدْتَ فِتْنَةً فِي قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ، وَأَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ»
{قال صلى الله عليه وسلم عن هذه الدعوات: إِنَّهَا حَقٌّ فَادْرُسُوهَا ثُمَّ تَعَلَّمُوهَا}
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஃபிஃலல் ஹைராத் வதர்கல் முன்கராத் வஹுப்பல் மஸாகீன், வஅன் தஃபிரலீ வதர்ஹமனீ, வஇதா அரத்த ஃபித்னதன் ஃபீ கவ்மின் ஃபதவஃப்பனீ ஹைர மஃப்தூன், வஅஸ்அலுக ஹுப்பக வஹுப்ப மன் யுஹிப்புக வஹுப்ப அமலின் யுகர்ரிபு இலா ஹுப்பிக
இறைவா! நல்லவை செய்வதையும், தீயவைகளை விட்டுவிடுவதையும், ஏழைகளை விரும்புவதையும் உன்னிடம் கேட்கிறேன். என்னை மன்னித்து, எனக்கு அருள் புரிய வேண்டுமெனவும் உன்னிடம் கேட்கிறேன். ஓர் சமூகத்துக்கு சோதனையை வழங்க நீ நாடினால் அது வருமுன்னரே என்னை மரணிக்கச் செய்துவிடு. (இறைவா!) உனது அன்பையும், உன்னை விரும்புவோரின் அன்பையும், உனது அன்பைப் பெற்றுத்தரும் செயல்களையும் உன்னிடம் கேட்கிறேன்.
{இந்த துஆ பற்றி நபியவர்கள், “இது உண்மையானது. இதை நீங்களும் கற்று, பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்” எனக் கூறினார்கள்}