3

«وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ رَبِّي، وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي، وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ، وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ»
{وهو من أدعية استفتاح الصلاة، خاصة في صلاة قيام الليل}

வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாதி வல்அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலாதீ வநுசுகீ வமஹ்யாய வமமாதீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீகலஹு வபிதாலிக உமிர்து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்தல் மலிகு லாயிலாஹ இல்லா அன்த, வஅன அப்துக ளலம்து நஃப்ஸீ, வஃதரஃப்து பிதன்பீ ஃபஃக்பிர்லீ துனூபி ஜமீஆ, லாயஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லாகி லா யஹ்தீ லிஅஹ்ஸனிஹா இல்லா அன்த, வஸ்ரிஃப் அன்னீ ஸய்யிஅஹா,லாயஸ்ரிஃபு அன்னீ ஸய்யிஅஹா இல்லா அன்த, லப்பைக வஸஃதைக வல்கைரு குல்லுஹு ஃபீயதைக வஷ்ஷர்ரு லைஸ இலைக அன பிக வஇலைக தபாரக்த வதஆலைத அஸ்தஃபிருக, வஅதூபு இலைக.

வானங்களையும் பூமியையும் படைத்த (இறை)வனின் பக்கம் கலப்பற்றவனாக எனது முகத்தை நான் முன்னோக்கச் செய்துவிட்டேன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் அல்ல! "நிச்சயமாக எனது தொழுகையும், எனது மற்ற வணக்க வழிபாடுகளும், நான் வாழ்வதும், நான் மரணிப்பதும் அகிலங்களின் இறைவன் அல்லாஹ்விற்காகவே ஆகும். அவனுக்கு இணை துணை அறவே இல்லை. இப்படித்தான் எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நான் அவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிம்களில் ஒருவனாவேன்.' அல்லாஹ்வே! நீதான் அரசன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; நீயே என் இறைவன்; நான் உனது அடிமை; நான் எனக்கு அநீதி இழைத்துக் கொண்டேன்; எனது குற்றத்தை ஒப்புக் கொண்டேன்; என் குற்றங்கள் அனைத்தையும் நீ மன்னித்துவிடு! நிச்சயமாக உன்னைத் தவிர குற்றங்களை மன்னிப்பவர் வேறு யாருமில்லை. குணங்களில் மிகச் சிறந்ததற்கு நீ எனக்கு வழிகாட்டு. குணங்களில் மிகச் சிறந்ததற்கு உன்னைத்தவிர வேறு யாரும் வழிகாட்ட முடியாது. குணங்களில் தீயதை விட்டும் என்னைத் திருப்பிவிடு! குணங்களில் தீயதை உன்னைத்தவிர வேறு யாராலும் என்னை விட்டுத் திருப்ப முடியாது. உன் அழைப்புக்கு பதில் அளித்து விட்டேன்; உனக்குமுன் ஆஜராகி விட்டேன்; நன்மையெல்லாம் உனது இரு கரங்களிலேயே இருக்கிறது! தீமை உன்னைச் சார்ந்தது அல்ல; நான் உன்னைக் கொண்டே (வாழ்கிறேன்). உன் பக்கமே (திரும்புகிறேன்). நீ மிக்க பரக்கத் உடையவன்; மிக உயர்ந்தவன்; உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்; உன் பக்கமே மீளுகிறேன்.

{இதுவும் தொழுகையின் , குறிப்பாக இரவுத் தொழுகையின் ஆரம்பத்தில் ஓதும் துஆவாகும்.}

3/16