9

﴿اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ٢٦ تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الَمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَاب﴾
{آيتان من سورة آل عمران آية (٢٦-٢٧)، وفي أول الآية الأولى حُذفت كلمة (قل) عمدًا للإشارة إلى بداية الدعاء.}

அல்லாஹும்ம மாலிகல் முல்கி துஃதில் முல்க மன் தஷாஉ வதன்ஸிஉல் முல்க மிம்மன் தஷாஉ வதுஇஸ்ஸு மன் தஷாஉ வதுதில்லு மன் தஷாஉ பியதிகல் ஹைரு இன்னக அலா குல்லி ஷைஇன் கதீர். தூலிஜுல் லைல ஃபிந்நஹாரி வதூலிஜுன் நஹார ஃபில்லைலி வதுஹ்ரிஜுல் ஹய்ய மினல் மய்யிதி வதுஹ்ரிஜுல் மய்யித மினல் ஹய்யி வதர்ஸுகு மன் தஷாஉ பிஹைரி ஹிஸாப்.

“அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய். (அல்குர்ஆன் 03:26, 27).

{மேற்கூறப்பட்ட இரண்டு வசனங்களும் அல்குர்ஆனில் உள்ள சூறா ஆலுஇம்ரானில் இடம்பெற்ற 26, 27 ஆகிய வசனங்களாகும். அதன் ஆரம்பத்தில் இடம்பெறும், “நபியே நீர் கூறுவீராக” எனும் சொல் துஆவை குறிப்பிட வேண்டும் என்பதற்காய் நீக்கப்பட்டுள்ளது.}

9/24