5

உன் உணவு, குடிபானம் போன்றவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட முறைகளில் பெறப்பட்டதாக இருக்கக் கூடாது. அது உன் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதை தடுக்கும் காரணிகளாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள், “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி "என் இறைவா, என் இறைவா" என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது. அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது. அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது. தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” (முஸ்லிம் 1015)

5/16