4

நீ பாவத்திலிருந்து எவ்வளவு தூரமாக இருந்தாலும் நீ பாவமன்னிப்பு கேட்பதைக் கண்டு, உனக்காக அவற்றை ஏற்றுக்கொள்வதில் அல்லாஹ் சந்தோசமடைகிறான் என்பதை மனதில் நிறுத்திக் கொள். பிரார்த்தனைக்கான பிரதிபலன் கிடைக்காமல் போகிறதே என அவனின் அருட்கொடைகளில் நிராசையடைவதை விட்டும் விலகியிரு. உன் பாவமன்னிப்பைக் கண்டு, அதை நிறைவேற்றுவதில் அவன் அளப்பரிய சந்தோசமடைகிறான் என்பதை மாத்திரம் மனதில் இருத்திக் கொள் -அல்லாஹ் அனைத்தை விட்டும் தேவையற்றவன்- பின்வரும் அல்லாஹ்வின் கூற்றுக்களைக் கவனி. அல்லாஹ் கூறுகிறான், “அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கிறான்” (அல்குர்ஆன் 39:53), “(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.” (அல்குர்ஆன் 02:186)

4/16