1
துஆவை அல்லாஹ்விடம் மாத்திரமே கேட்க வேண்டும். அல்லாஹ் ஒருவன், தான் கேட்கும் துஆவை அவனால் மாத்திரமே நிவர்த்தி செய்ய முடியும் எனவும், நபிமார்கள், அவ்லியாக்கள், மலக்குகள், நல்லடியார்கள் போன்ற எவரிடமும் துஆ கேட்கக் கூடாது என்பதையும் உளப்பூர்வமாக அறிந்திருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், “அந்தரங்க சுத்தியுடனும், சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாகவும் அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள்” (அல்குர்ஆன் 40:14).