1
முஸ்லிமே! உன் இறைவன் உன்னை விட்டும் தேவையற்றவன்... நீ தான் அவனிடம் தேவையுடையவன்... உனக்காகவே இத் துஆக் கோர்வை... இதைக் கொண்டு உன் உள்ளத்தை தயார்படுத்திடு...
ஒவ்வொரு நலவுக்கும் தேவையான சுருக்கமான துஆக்களே இவை.
அவற்றில் இயலுமானவைகளை மனனமிட்டுக்கொள்.
இவற்றில் எத்தனையோ துஆக்கள் உன் ஒவ்வொரு தேவைக்கும் போதுமானதாக உள்ளன.
ஏனெனில் இவை குறைவான சொற்களைக் கொண்ட, பாரிய அர்த்தத்தைத் தரக் கூடிய துஆக்கள்.
அவற்றை ஓதும் போது மனதை ஒரு முகத்துடன் இருத்தி, இறைவனுக்கு அடிபணிந்து ஓதிடு.