بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ١ اللَّهُ الصَّمَدُ ٢ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ٣ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ٤﴾
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ١ مِنْ شَرِّ مَا خَلَقَ ٢ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٣ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ٤ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥﴾
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ١ مَلِكِ النَّاسِ ٢ إِلَهِ النَّاسِ ٣ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ٤ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ٥ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ٦﴾
قراءة سورة الإخلاص والمعوذتين ثم النفث باليدين ومسح موضع الألم ويفعل ذلك ۳ مرات
சூறதுல் இஹ்லாஸ் மற்றும் பாதுகாவலுக்கான இரு சூறாக்களையும் ஓதி இரு கைகளிலும் ஊதிவிட்டு, வலி ஏற்பட்ட இடத்தில் தடவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு 3 தடவை செய்ய வேண்டும்.
அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:01-04)
அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 113:01-05)
(நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். (அவன்தான்) மனிதர்களின் அரசன். (அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயன். பின்னால் பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களைக் கிளப்பக் கூடியவ(னான ஷைத்தா)னின் தீங்கைவிட்டும் (நான் பாதுகாவல் தேடுகிறேன்). அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களைக் கிளப்பிவிடுகிறான். (இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 114:01-06)