12

· ஓதிப்பார்க்கும் போது கவனிக்க வேண்டிய சில நிபந்தனைகள்:

1. ஓதிப்பார்க்கும் வார்த்தைகள் (மேலே குறிப்பிடப்பட்ட) அல்குர்ஆன் ஸுன்னாவிலிருந்து பெறப்பட்ட சரியான வார்த்தைகளாக இருக்க வேண்டும். இணைவைப்பு, பித்அத், இஸ்லாம் தடுத்த விடயங்கள் போன்றவற்றை விட்டும் வார்த்தைகளாலும், செயல்களாலும் தூரமாக இருக்க வேண்டும்.

2. இதை ஓதும் முஸ்லிம் அல்லாஹ்வின் மீது மாத்திரமே நம்பிக்கை வைக்க வேண்டும். ஓதிப்பார்த்தல் என்பது ஓர் காரணியாகவே அன்றி அதற்கு எவ்வித சக்தியும் கிடையாது எனவும், அல்லாஹ்வின் நாட்டத்துடன் இது தொடர்புபட்டுள்ளது எனவும் உறுதியாக அறிந்திருக்க வேண்டும்.

3. ஓதிப்பார்ப்பது அனுபவத்தால் என்றும் நிகழாது. மாறாக அதனால் ஏற்படும் தாக்கத்தையே நம்ப வேண்டும். ஓதிப்பார்ப்பவரும், நோயாளியும் அதன் தாக்கம் பற்றியும், அதனால் நிவாரணம் கிடைக்கும் என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

4. பொதுவாக அல்குர்ஆனின் அனைத்து வசனங்களுமே ஓதிப்பார்ப்பதற்கான வார்த்தைகளாகும். அல்லாஹ் கூறுகிறான், “இன்னும், நாம் முஃமின்களுக்கு (ரஹ்)மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்” (அல்குர்ஆன் 17:82). ஆயினும் ஓதிப்பார்த்தலுக்கென பிரத்தியேகமாக அல்குர்ஆன் ஸுன்னா குறிப்பிடும் துஆக்கள் முற்படுத்தப்படுவது ஏற்றமானது.

5. ஓர் நோயாளி தனக்குத் தானே ஓதிப்பார்ப்பது மிகவும் சிறந்தது. அதுவே அவருக்கு மிகவும் பிரயோசனமாகவும், அல்லாஹ்விடத்தில் தனது தேவையை முன்வைத்து, தனது இயலாமையை யதார்த்தமாக வெளிக்காட்டும் செயற்பாடாகவும் இருக்கும். உணர்வோடும், மனத்தூய்மையோடும் செய்யும் போதே ஓதிப்பார்த்தலுக்கான தாக்கம் தெரிய ஆரம்பிக்கும்.

12/12