(أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، اللَّهُمَّ إِنِّي أسْأَلُكَ خَيْرِ مَا فِي هَذَه الْليلة، وَخَيْر مَا بعدِها، وَأَعُوذُ بِك مِنْ شَرِّ مَا فِي هَذه الليلة، وَشَر مَا بَعْدِها، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَسُوءِ الْكِبَرِ، وَفِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْر)
அம்ஸைனா வஅம்ஸல் முல்கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி,லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு. அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைர மாஃபீ ஹாதிஹில் லைலதி வஹைர மா பஃதஹா, வஅஊது பிக மின் ஷர்ரி மா ஃபீ ஹாதிஹில் லைலதி வஷர்ரி மா பஃதஹா, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் கஸ்லி வல் ஹரமி வஸூஇல் கிபரி, வஃபித்னதித் துன்யா, அதாபில் கப்ரி.
நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை.. இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! சோம்பல், முதுமை, மோசமான பெருமை, உலக குழப்பங்கள், மண்ணறையின் வேதனை போன்றவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.