1

அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அவனின் கருணையும், ஈடேற்றமும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவரின் குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் உண்டாவதாக! இது சுருக்கமான துஆக்களை உள்ளடக்கிய ஓர் சிறிய நூலாகும். (இதில் அல்லாஹ்வைப் புகழ்தல், அல்குர்ஆனிய துஆக்கள், நபி (ஸல்) அவர்கள் ஓதிய துஆக்கள், நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு தேட பயன்படுத்திய துஆக்கள், ஓதிப்பார்க்க பயன்படும் துஆக்கள், காலை மாலை துஆக்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன). அவ்வாறே இதில் துஆ கேட்பதன் ஒழுங்கு முறைகளும் உள்ளடங்கியுள்ளன. அதிக நலவுகளை ஓர் முஸ்லிம் பெற்றிட வேண்டும் எனும் நோக்கில் அல்குர்ஆன், ஸுன்னாவிலிருந்து சரியான துஆக்களை மாத்திரம் தேர்வு செய்ய வேண்டுமென்பதில் அதிக கரிசனை காட்டியுள்ளேன். அனைத்து துஆக்களையும் அரபியிலும், தமிழில் அதன் அர்தத்தங்களையும், அதன் சரியான உச்சரிப்பு முறைகளையும் எழுதியுள்ளேன். இந் நூலின் இறுதியில் துஆக்கள் இடம்பெற்ற ஹதீஸ்களின் தன்மைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.

இப்பாரிய சேவை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுத் தரவேண்டும் என அவனிடமே வேண்டிக் கொள்கிறேன். எம் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் அல்லாஹ்வின் கருணையும், ஈடேற்றமும் என்றென்றும் உண்டாவதாக!

கலாநிதி அப்துல்லாஹ் இப்னு ஹமூத் அல்ஃபுரைஹ்

1/1